விஜய் - சங்கீதாவின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா.. இதோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் கடைசியாக நடித்துள்ள படம் ஜனநாயகன். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துவிட்டார்.
ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு ஒரு முடிவே இல்லையா என ரசிகர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வந்தால் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஜனநாயகன் வெளிவரும் என கூறுகிறார்கள். அப்படி முடியவில்லை என்றால், 2026 தமிழக தேர்தலுக்கு பின் வெளிவர அதிக வாய்ப்புள்ளது என முக்கிய புள்ளிகள் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவர் திருமணம் செய்துகொண்டார். விஜய் - சங்கீதா ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஜேசன் சஞ்சய் தனது தாத்தா, தந்தையை போலவே சினிமாவில் களமிறங்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள முதல் படம் 'சிக்மா' விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், விஜய் - சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத அந்த புகைப்படங்கள் இதோ:




