நடிகர் விஜய்யை திட்டிய அவரது மனைவி சங்கீதா.. காரணம் திருமணம் தான்
நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு குடும்ப உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் சஞ்சய் என ஒரு மகனும், திவ்யா என ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய்யை அவரது மனைவி சங்கீதா குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக செமையாக திட்டி தீர்த்துள்ளாராம்.
அது என்னவென்றால், நடிகர் விஜய்யின் ரசிகரும், பிரபல நடிகரும் ஆனவர் சாந்தனு பாக்யராஜ். இவருக்கும், பிரபல தொகுப்பாளினி கீர்த்திக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் விருந்தினராக பங்கேற்றுக்கொண்டு, கீர்த்தியின் கழுத்தில் கட்ட, சாந்தனுவிற்கு திருமண மேடையில் தாலி எடுத்துக்கொடுத்துள்ளார்.
இதனை தெரிந்துகொண்ட விஜய்யின் மனைவி சங்கீதா, 'நீங்கள் எப்படி தாலி எடுத்துக்கொடுக்கலாம். அது பெரியவர்கள் செய்யவேண்டிய விஷயம்' என்று விஜய்யை திட்டியுள்ளாராம்.
இந்த சம்பவத்தை நடிகர் சாந்தனு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.