விஜய்யின் நெய்வேலி சம்பவமெல்லாம் ட்ரைலர் தான், கேரளா தான் மெயின் சம்பவம்

By Kathick Mar 20, 2024 07:00 AM GMT
Report

நெய்வேலி சம்பவம்

நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் திடீரென IT ரைடு சம்மந்தமாக விஜய்யை அழைத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின், அங்கு கூடிய கூட்டத்தை பார்த்து அரசியல் ரீதியாக பெரும் அளவில் பேசப்பட்டது.

விஜய்யின் நெய்வேலி சம்பவமெல்லாம் ட்ரைலர் தான், கேரளா தான் மெயின் சம்பவம் | Vijay Selfie In Kerala With Fans

43 வயதில் கே.ஜி.எப் யாஷுடன் கைகோர்க்கும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா

43 வயதில் கே.ஜி.எப் யாஷுடன் கைகோர்க்கும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா

அப்போது தளபதி விஜய் எடுத்த செல்பி உலகளவில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது கேரளா சம்பவம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் கேரளாவிற்கு படப்பிடிப்பிற்காக சென்று இருந்தார்.

கேரளா

அப்போது விஜய்யை காண பல்லாயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர். ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிய விஜய் காரின் கண்ணடிகள் உடைந்தது. தமிழகத்தில் தான் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் தற்போது தமிழகத்தை மிஞ்சும் அளவிற்கு கேரளாவில் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.

விஜய்யின் நெய்வேலி சம்பவமெல்லாம் ட்ரைலர் தான், கேரளா தான் மெயின் சம்பவம் | Vijay Selfie In Kerala With Fans

நேற்று இரவு கேரளாவில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் Goat பட படப்பிடிப்பு நடந்தது. அப்போது பல்லாயிரம் ரசிகர்கள் அங்கும் குவித்தனர். இப்படியிருக்க வழக்கம் போல் Van மீது ஏறிய விஜய், மாஸாக செல்பி ஒன்றை எடுத்தார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் நெய்வேலி சம்பவமெல்லாம் ட்ரைலர் தான், கேரளா தான் மெயின் சம்பவம் | Vijay Selfie In Kerala With Fans

மேலும் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி கேமியோ ரோலில் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US