அனைத்து ரசிகர்களுக்கும் திடீரென விஜய் அனுப்பிய எச்சரிக்கை! மீறினால் சட்டப்படி நடவடிக்கை
விஜய் ரசிகர்கள் தற்போது பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்காக தான் காத்திருக்கின்றனர். ஏற்கனவே வெளிவந்த பாடல்கள் மற்றும் ட்ரைலரை பெரிய அளவில் அவர்கள் கொண்டாடினார்கள்.
பீஸ்ட்
வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது வரை முன்பதிவை தொடங்கிய தியேட்டர்களில் பெரும்பாலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டது.
தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால் பீஸ்ட் படத்தின் வசூல் முதல் வாரத்தில் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு தற்போது மக்கள் இயக்கத்தில் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர். அதில் அரசியல் கட்சி தலைவர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்ட யாரையும் விமர்சித்து மீம் உள்ளிட்ட எதுவும் வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
மேலும் அதை மீறி செய்பவர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Official Statement From Vijay Makkal Iyakkam..!!#Beast #BeastModeOn @actorvijay pic.twitter.com/T1VfUdXZE3
— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) April 6, 2022