ஒரே மாதத்தில் நான்கு படங்கள்.. விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது.
அதே போல் இவர் நடித்து முடித்த பல திரைப்படங்கள் வெளியாக, வரிசையில் காத்துகொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த மாதம் மட்டுமே விஜய் சேதுபதி நடிப்பில் உருவான நான்கு திரைப்படம் வெளியாகவுள்ளது.
ஆம், வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று, நேரடியாக சன் டிவியில், துக்ளக் தர்பார் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
மேலும், டாப்சியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருக்கும், அனபெல் சேதுபதி திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
இதுமட்மின்றி கடைசி விவசாயி திரைப்படம், செப்டம்பர் மாததிற்குள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.