அஜித்துடன் நடிக்காதது ஏன்.. விஜய் சேதுபதி உடைத்த உண்மை
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
நடிப்பை தாண்டி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக வலம் வந்தார். நடிகனாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடங்கள் என பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்துள்ளார்.
நடிக்காதது ஏன்
இந்நிலையில், நேற்று பெரம்பலூரில் உள்ள கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.
அவரிடம், அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி, இதுவரை நடந்தவை எல்லாம் நான் திட்டமிட்டு நடக்கவில்லை.
ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். அஜித்துடன் நான் முன்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
