மகன் மற்றும் மகளை விஜய் சேதுபதி இப்படியெல்லாம் நடத்துவாரா.. நல்ல விஷயம்தான்!
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. தற்போது, இவர் பிஸியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் 50 - வது படமான மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமா மட்டுமின்றி சீனாவிலும் வெற்றிகரமாக வசூல் நடத்தி வருகிறது.
இப்படியெல்லாம் நடத்துவாரா
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது குழந்தைகள் மற்றும் சினிமா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், " நான் என் மகன் சூர்யாவை அப்பா எனவும், மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும் தான் அழைப்பேன்.
ஆனால், அவர்கள் இருவரும் என்னை அதிகாரம் செய்வார்கள். தினமும் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்பதை குறித்து என் மகன் மற்றும் மகளிடம் கூறுவேன்.
எந்த விஷயமாக இருப்பினும் அவர்கள் கருத்தையும் கேட்பேன். என் குழந்தைகளின் மத்தியில் நான் அப்பா என்ற பிம்பத்தை உருவாக்க நினைப்பதில்லை. சொல்லப்போனால் நான் அவர்கள் முன் ஒரு குழந்தை போன்று தான் தெரிவேன்" என்று கூறியுள்ளார்.