சாப்பாட்டிற்காகவே நான் அங்கு செல்வேன்... அனுபவித்த கஷ்டங்கள் பற்றி விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் வளர்ந்திருக்கும் பிரபலங்கள் எல்லோருமே எடுத்த உடனே வளரவில்லை.
பலரும் நிறைய கஷ்டங்கள், பிரச்சனைகள், சவால்கள் என சந்தித்து தான் ஒரு உயரிய இடத்தை பிடித்திருக்கிறார்கள். அப்படி சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது தமிழ் சினிமா கொண்டாடும் நாயகனாக வளர்ந்திருப்பவர் தான் விஜய் சேதுபதி.

தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் நிறைய படங்கள் நடித்து ரசிகர்களை பிடித்துள்ளார். அதேபோல் எல்லா பிரபலங்களை போல இல்லாமல் ரசிகர்களை சந்திப்பதும், பழகுவதும் ஒரு தனிவிதமாக இருந்தது, அதன்மூலமாகவும் விஜய் சேதுபதி தனியாக பார்க்கப்பட்டார்.

கஷ்ட காலம்
தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி விஜய் சேதுபதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், துபாயில் வேலை பார்த்தபோது மாதம் ரூ.10,000 வீட்டிற்கு அனுப்ப வேண்டியிருந்தது. எல்லா நாளும் சாப்பிட்டால் பணம் அனுப்ப முடியாது என்பதால் காலையில் டீ, மதியம் ஜுஸ் மட்டுமே சாப்பிடுவேன்.
மாலையில் கோயிலுக்குச் சென்றால் பிரெட், சென்னா கொடுப்பார்கள். வெள்ளிக்கிழமை குருத்துவாராவில் தயிர் சாதம், சாம்பார் சாதம் கொடுப்பார்கள், இதற்காகவே கோயிலுக்குப் போவேன் என கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
நெருங்கிய ரஷ்ய இராணுவ விமானங்கள்... பீதியில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தென் கொரியா News Lankasri