கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் இந்த பிரச்சனை இருக்கு.. விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய எபிசோடில் அவர் போட்டியாளர்களிடம் ஒரு விஷயம் கேட்டார்.
எந்த ஒரு போட்டியாளர் பணத்திற்காக மட்டுமே வீட்டில் இருக்கிறார்? அந்த நாளை கடத்தினால் போதும் பணம் வந்துவிடும் என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் என சொல்லுங்க என விஜய் சேதுபதி கேட்டார். அதற்கு பலரும் அரோராவின் பெயரை கூறினார்கள்.

கோடியில் சம்பளம்.. ஆனாலும் கடன்
பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என இருப்பதாக வரும் குற்றச்சாட்டு பற்றி பின்னர் விஜய் சேதுபதி பேசினார்.
நான் ஆயிரத்தில் சம்பாதித்த போது ஆயிரத்தில் கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடியில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த பிரச்சனை என்னுடன் இருக்கு. அதனால் அதனுடனே வாழ கற்றுக்கொண்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார்.
