இயக்குனர் வெற்றிமாறன் என்னை ஏமாற்றி விட்டார் - நடிகர் விஜய் சேதுபதி பேச்சு
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் "விடுதலை". சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. "விடுதலை" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார்.
விஜய் சேதுபதி பேச்சு
இப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் 8 நாட்கள் என கூறி அழைத்துச் சென்று, 8 நாட்களும் அவரை வைத்து ஆடிஷன் மட்டும் செய்ததாகவும், அதன் பின்னர் தான் படப்பிடிப்பு தொடங்கியது என்று கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த "வடசென்னை" படத்தில் நடிக்க வாய்ப்பு தவர விட்டதனால் மிகவும் வருத்தம் அடைந்தாராம்.

அதனால் அவரின் "விடுதலை" படத்தில் நடிக்க ஆசை பட்டதாக தெரிவித்தார். அவருடன் வேலை செய்த அனுபவம் மிகவும் அறிவு சார்ந்ததாக இருந்தது என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகா முக அழகிற்கு இதுதான் காரணமா?