விஜய்யின் ஆறு மாத ஆட்சி.. விஜய் சேதுபதி சொன்ன விமர்சனம்
முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆகும் நிலையில், அது பற்றி விஜய் சேதுபதி பேசியது வைரல் ஆகி இருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக சர்ச்சை வெடித்தது. அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விஜய் சேதுபதியை சமூக வலைத்தளங்களில் தாக்கி பதிவிட்டு வந்தனர்.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் Train என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த பேட்டியில் அரசியல் பற்றி சொன்ன கருத்துக்கள் வைரல் ஆகி இருக்கிறது.

விஜய் ஆறு மாத ஆட்சி பற்றி..
முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆவது பற்றி தொகுப்பாளர் கேள்வி கேட்க, விஜய் சேதுபதி சொன்ன பதில் இதுதான்.
"விஜய் சாரை நடிகராக தான் எனக்கு தெரியும். அரசியலை நான் தீவிரமாக பார்ப்பதில்லை. அது என் வேலை இல்லை. நமக்கு வேற வேலை இருக்கு."
"எனக்கு அரசியல் கருத்து பேச எந்த விதமான ஆட்சேபமும் இல்லை, ஆனால் அதை நாகரீகமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கே இல்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி" என விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை என விஜய் மற்றும் அவரது கட்சியை விஜய் சேதுபதி விமர்சித்து இருப்பது வைரல் ஆகி இருக்கிறது.
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri