நஷ்டத்தை நோக்கி விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தின் வசூல்... மொத்த கலெக்ஷன் விவரம்
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 50வது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியது.
அப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளியான திரைப்படம் ஏஸ். விஜய் சேதுபதியுடன் ருக்மிணி வசந்த், யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக மலேசியாவில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய கலெக்ஷன் பெறவில்லை.
இதுவரை மொத்தமாக ரூ. 9 கோடி வரை மட்டுமே வசூலித்து படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri