விமான நிலையத்தில் தீடீரென விஜய் சேதுபதியை தாக்க வந்த நபர்.. அனைவரையும் அதிர்ச்சியாக்கிய வீடியோ
தமிழ் திரையுலகில் பிசியாக கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.
ஆம், தற்போது தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான துக்ளக் தர்பார், லாபம் மற்றும் அனெபல் சேதுபதி என மூன்று படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
மேலும், அடுத்தாக வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் சேதுபதி விமானநிலையத்தில் நடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியை தாக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால், விஜய் சேதுபதியுடன் இருந்த காவலர்கள் அதனை தடுத்து நிறுத்தினார். அந்த ஷாக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.