பாக்ஸ் ஆபிஸ்- மாஸ் ஹிட்டடித்துள்ள விஜய் சேதுபதியின் பத்தா மொத்த கலெக்ஷன்...
பத்தா படம்
பாலாஜி தரணிதரன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சாய் ப்ரித்விராஜ், லிஜோமோல் ஜோஸ், சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு உள்ளூர் டானாக விஜய் சேதுபதி பத்தா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண பள்ளிச் சிறுவனால் அந்த டானின் தலைக்கனமும் அகந்தையும் எப்படி உடைகிறது என்பதே கதை.

சில சம்பவத்திற்கு பிறகு டானின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களும், அவர் எப்படி ஒரு புதிய மனிதகான மாறுகிறார் என்பதும் தான் படத்தில் சுவாரஸ்யமாக வைக்கப்பட்டுள்ள விஷயம்.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாக நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. எப்போதும் போல் சில நெகட்டீவ் விமர்சனங்கள் வந்தாலும் இப்பட வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

திரையரங்குகளில் 15 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியுள்ள இப்படம் ஹிட்டாகியுள்ளது. மொத்தமாக படம் ரூ. 39 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.