பிக்பாஸ் 9வது சீசனிற்காக விஜய் சேதுபதி வாங்கப்போகும் சம்பளம்... இத்தனை கோடியா?
பிக்பாஸ்
இந்திய தொலைக்காட்சியில் ரசிகர்கள் கொண்டாடிய எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்துள்ளது.
அதில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, அதன்பின் ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வந்தது.
அடுத்து பிக்பாஸ் 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சமீபத்தில் தான் புரொமோ வெளியானது.
சம்பளம்
கடந்த 8வது சீசன் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த 9வது சீசன் யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க இந்த முறையும் விஜய் சேதுபதி தான் என உறுதியானது.
8வது சீசன் தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ. 60 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம்.
அந்த சீசன் ஹிட்டானதை தொடர்ந்து 9வது சீசனில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த 9வது சீசனிற்காக ரூ. 75 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறதாம்.