முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி! கிளைமாக்ஸை மாற்றி சூப்பர்ஹிட் ஆன படம்
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா சேர்ந்து நடித்த 96 படம் ரிலீஸ் ஆன நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பை பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.
96
படம் பார்த்த எல்லோருக்கும் அவர்களது கல்லூரி கால நினைவுகளை கொண்டு வந்தது என பலரும் கூறினார்கள். பள்ளி பருவத்தில் காதலித்தவர்கள், சில காரணங்களால் பிரித்துவிட்ட நிலையில், பல வருடங்கள் கழித்து மீண்டும் கெட்டுகெதர் விழாவில் சந்தித்து பேசி அதன் பின் நடக்கும் உரையாடல்களை தான் இயக்குனர் காட்டி இருப்பார்.

கிளைமாக்ஸ் மாற்றிய விஜய் சேதுபதி
படத்தின் இறுதியில் விஜய் சேதுபதி த்ரிஷா இருவரும் லிப்லாக் முத்தமிடுவது போல காட்சி வைப்பதாக தான் இயக்குனர் கூறினாராம். அதற்கு த்ரிஷாவும் ஓகே சொன்னாராம்.
ஆனால் விஜய் சேதுபதி அது படத்தின் தீமை மாற்றிவிடும், தவறான ஒரு மெசேஜ் சொல்வது போல இருக்கும் என கூறி வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.