ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிக்கு வரும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ.. யார் தெரியுமா
ஸ்டார்ட் ம்யூசிக்
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது விஜய். இதில் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் இதுவரை ஒளிபரப்பாகி உள்ளது.
அதில் ஒன்று தான் ஸ்டார்ட் ம்யூசிக். தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்துள்ளது.
மேலும் தற்போது ஐந்தாவது சீசனும் நடிகை சிம்ரன் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்து துவக்கிவைத்துள்ளனர்.
விஜய் சேதுபதி என்ட்ரி
இந்த நிலையில், அடுத்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 4ன் இரண்டாவது எபிசோடில் ஸ்பெஷல் விருந்தினராக நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.
இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த வாரம் ஸ்டார்ட் ம்யூசிக் விஜய் சேதுபதியுடன் எப்படி இருக்கப்போகிறது என்று.