மூன்று படத்தில் ரூ. 80 கோடி சம்பாதித்த விஜய் சேதுபதி.. வில்லனுக்கு இவ்வளவு சம்பளமா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
இவரின் வில்லத்தனமான நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதன்பின், வெளியான மாமனிதன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்
இந்நிலையில், விஜய் சேதுபதி அடுத்ததாக புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தில் நடிக்க ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.
மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 30 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.
அடுத்ததாக பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகவுள்ள படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்காகவும், விஜய் சேதுபதிக்கு ரூ. 25 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூன்று படங்களையும் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய் சேதுபதி. இதன்முலம், ஒரே மாதத்தில் ரூ. 80 கோடி சம்பாதித்துள்ளார் என கூறுகின்றனர்.
இந்த தகவல் பிரபல மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
