அபாயம்! இது வடநாடா? இல்லை தமிழ் நாடா? வைரலாகும் விஜய் சேதுபதியின் போஸ்டர்
ஆரம்ப காலகட்டத்தில் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது பிரபல நடிகராக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
வடநாடா? தமிழ்நாடா?
சமீபத்தில் தமிழ் நாட்டில் கட்டிட வேலை, ஹோட்டல் போன்ற பல இடங்களில் வடமாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர். அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் மக்களை காட்டிலும் வடமாநில மக்கள் தான் அதிகமாக உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் இளைஞர்களை 100 மேற்பட்ட வடமாநிலத்தினர் கட்டை போன்றவற்றை வைத்து துரத்தி அடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் தீ போல வேகமாக பரவியது. இதை குறித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், அவரின் புகைப்படத்தை வைத்து, "அபாயம்! இது தமிழ் நாடா? இல்லை வடநாடா? என்று போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இதை பார்த்த பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த போஸ்டர்.
தாய், தந்தை, மனைவி, மகனுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்.. பலரும் பார்த்திராதது

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
