தனுஷுடன் இணைந்து நடிக்கவிருந்த விஜய் சேதுபதி.. எந்த படத்தில் தெரியுமா
தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது.
இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வடசென்னை.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் அமீர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானாம்.
அப்போது சில காரணங்களால் தனுஷுடன் இணைந்து விஜய் சேதுபதியால் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் அமீர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானாராம்.