பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய கெமிக்கு, விஜய் சேதுபதி கொடுத்த பரிசு... எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
20 போட்டியாளர்களுடன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ இப்போது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் 9 தொடங்கிய நாட்கள் முதல் வீட்டில் ஒரே சண்டை, இரட்டை முறையில் பேசுவது, கத்திக்கொண்டே இருப்பது என சீ இதெல்லாம் ஒரு ஷோவா என ரசிகர்கள் வெறுக்கும் அளவிற்கு இருந்தது. இப்போது கொஞ்சம் நிலைமை மாறியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
வைல்ட் கார்டு என்ட்ரிகள் பிறகு கொஞ்சம் ஷோ மாற இப்போது பார்ப்பது போல் உள்ளது.
பரிசு
கடைசியாக பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து கெமி வெளியேறியிருந்தார்.
அவரது எலிமினேஷன் சில ரசிகர்களுக்கு ஏற்க முடியாத விஷயமாக தான் உள்ளது. கெமி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய போது விஜய் சேதுபதி அவருக்கு ஒரு கண்ணாடி பரிசாக வழங்கியுள்ளார்.
துபாயில் அந்த கண்ணாடியின் விலை சுமார் ரூ. 18 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.