ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி.. பாராட்டு மலையில் நடிகர்
தமிழ் திரைத்துறையில் பெப்சி அமைப்பு இல்லாமல் ஒரு திரைப்படம் உருவாகாது.
எப்போதெல்லாம் ஒரு தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறாரோ அப்போது இந்த அமைப்பில் உள்ள ஒரு தொழிலாளரின் குடும்பம் பாதிக்கப்படும்.
வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு, சூப்பர் ஸ்டார்களுக்கு மேக்கப் போடும் தொழிலாளர் ஒரு நாள் வேலை இழப்பை சந்தித்தாலும் வாடகை கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.
இதனால், பையனூர் பக்கத்தில் பல ஏக்கர் இடத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வீடு கட்ட பல முயற்சிகள் எடுத்தும், அது நடக்கவில்லை.
இந்நிலையில், இதற்காக பெப்சி அமைப்பை சேர்ந்த பலரும், நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பின், இந்த வீடு கட்டும் பணிக்காக ரூ.1 கோடியை கொடுப்பதாக சொல்லியிருந்தார். இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri