மகள் திருமணத்திற்கு பணம் இல்லாமல் தவித்த பிரபல நடிகர்.. விஜய் சேதுபதி செய்த செயல்
நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் சினிமாவை தாண்டி சீனாவில் அந்த படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் பெற்றது.
மகாராஜா படத்தில் வில்லனாக ஹிந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப் நடித்திருப்பார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கிய விஷயத்தை கூறி இருக்கிறார்.
மகள் திருமணம்
"இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு அதிகம் தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தது. பலவற்றை நான் நிராகரித்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வந்தது."
"நான் கென்னடி பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின்போது விஜய் சேதுபதியை அடிக்கடி சந்திப்பேன். அவர் ஒரு சிறப்பான ஸ்கிரிப்ட் இருக்கிறது, உங்களை சந்திக்க முயற்சி செய்கிறார்கள் என கூறினார். நான் முதலில் முடியாது என கூறினேன்".
"அதன் பிறகு பேசும்போது நான் எனது மகளுக்கு அடுத்த வரும் திருமணம் செய்ய நினைக்கிறேன், ஆனால் அதற்கு காசு இல்லை என சொன்னேன். உடனே அவர் நாங்கள் உதவுகிறோம்" என கூறினார்.
அதன் பிறகு தான் மகாராஜா படத்தில் தான் நடித்ததாக அனுராக் தெரிவித்து இருக்கிறார்.