மலேசியாவில் ரசிகைக்கு உதவிய விஜய் சேதுபதி! குவியும் பாராட்டு
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக மலேசியா சென்று இருந்தபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு செல்பி எல்லாம் எடுத்துக்கொண்டாராம்.
அப்போது அவரை சந்திக்க வந்த ரசிகை ஒருவர் சோகமாக இருந்ததை பார்த்து அவருக்கு என்ன பிரச்சனை என கேட்டாராம்.
உதவி
தான் இந்தியாவில் இருந்து வீடு வேலைக்காக மலேசியா வந்ததாகவும், அந்த நிறுவனத்தினர் பேசிய சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்ட நிலையில் தற்போது இந்தியாவுக்கு திரும்ப செல்ல முடியாமல் தவிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
அவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி, அதிகாரிகள் உடன் பேசி அவரது சொந்த செலவில் அந்த பெண் இந்தியா திரும்ப உதவி செய்தாராம்.
விஜய் சேதுபதி செய்திருக்கும் இந்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பாடியதால் இளையராஜா அடுத்து வாய்ப்பு தரல.. பாடகி மின்மினி அதிர்ச்சி புகார்