இப்படியே பேசிட்டு இருந்தா ஷோ முடிஞ்சிடும்.. விஜய் சேதுபதி முதல் நாளே இப்படியா
விஜய் சேதுபதி தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் புது தொகுப்பாளராக வந்திருக்கிறார்.
போட்டியில் விளையாடுவது தான் கஷ்டம். ஆனால் அதை பார்த்து தீர்ப்பு சொல்வது ஈஸி தான். அதில் எதாவது பிரச்சனை வந்தால் நாம பேசி தீத்துக்கலாம் என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.
(கடந்த சீசன் கமல்ஹாசன் ட்ரோல்களை சந்தித்த நிலையில், தன்னையும் அப்படி பண்ணிடாதீங்க என மறைமுகமாக சொல்கிறாரோ?)
அதன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அது எப்படி இருக்கிறது என சுத்தி காட்டினார் விஜய் சேதுபதி. அப்போது பிக் பாஸ் உடனும் அவர் பேசினார்.
ஷோவே முடிஞ்சிடும்..
விஜய் சேதுபதியை வரவேற்ற பிக் பாஸ், "உங்களை விஜய் குருநாத சேதுபதி என முழு பெயரை சொல்லி அழைக்கவா, இல்லை எல்லோரும் சொல்வது போல சேது என்று மட்டும் அழைக்கவா" என கேட்டார்.
முழு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டிருந்தால் ஷோவே முடிஞ்சிடும். அதனால் சுருக்காகவே கூப்பிடுங்க என சொன்னார் விஜய் சேதுபதி.