பைனலில் ஒரு போட்டியாளரை மட்டும் அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி! கொந்தளித்த சனம் ஷெட்டி
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் 8ம் சீசனின் தொகுப்பாளராக வந்த பிறகு அவர் மீது சில விமர்சனங்கள் வந்தது.
போட்டியாளர்களை பேச விடாமல், அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் பேசுகிறார் என்பது தான் அது.
ராணவ்வை பைனலில் அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி
இன்று பைனல் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் எல்லோரும் மீண்டும் வந்திருந்தனர். அவர்களிடம் விஜய் சேதுபதி பேசும்போது, 'நீங்கள் வெளியில் சென்று என்னவெல்லாம் செய்தீர்கள் என சொல்லுங்க' என கேட்டார்.
அப்போது பேசிய ராணவ் 'பிக் பாஸ் எனக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறது. அதுவும் நீங்கள் host ஆக இருக்கும் ஷோவில் தொடங்கி இருக்கிறது' என பேசிக்கொண்டிருந்தார்.
அதில் குறுக்கிட்ட விஜய் சேதுபதி, 'இது சுத்த பொய்.. சுத்த பொய்' என சொல்லி பிரேக் விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
அதன் பிறகு ஷோவில் சில நேரத்திற்கு பிறகு ராணவ் PR வைத்திருக்கிறார் என சொல்லி அவரை நக்கல் செய்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
மேலும் ”வருங்காலத்தில் உங்கள் உடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஒரு நிலை வந்தால், அந்த படமே வேண்டாம் என போய்விடுவேன்” என கூறி விஜய் சேதுபதி அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
விமர்சித்த சனம் ஷெட்டி
விஜய் சேதுபதி இப்படி ராணவ்வை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகிறார் என பிரபல நடிகை சனம் ஷெட்டி தற்போது கோபமாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
You May Like This Video

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
