நானும் ரவுடி தான் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் சேதுபதி கிடையாதாம்.. இந்த நடிகர் தானாம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.
இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், RJ பாலாஜி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இந்நிலையில் இப்படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிடையாதாம்.
ஆம், நானும் ரவுடி தான் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் மிர்ச்சி சிவா தானாம்.
இப்படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் மிர்ச்சி சிவாவிடம் தான் கூறினாராம்.
நடிகர் சிவா இதனை நிராகரித்ததனால், அதன்பின் இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து இப்படம் வெளியானதாம்.
இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் விருது விழா ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.