மாமனிதன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா.. விஜய் சேதுபதி இல்லையாம்

Kathick
in பிரபலங்கள்Report this article
மாமனிதன்
தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் மாமனிதன். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த பல திரையுலக நட்சத்திரங்கள் இயக்குனர் சீனு ராமசாமியை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இப்படத்திற்காக இயக்குனர் சீனு ராமசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு, பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்
அதில் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிப்பதாக இருந்தால், யார் நடிப்பார் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சீனு ராமசாமி " நான் முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை " என்று கூறியுள்ளார் சீனு ராமசாமி.