அரண்மனை 4 தொடங்கும் சுந்தர் சி! எதிர்பார்க்காத ஒரு ஹீரோ நடிக்கிறார்
அரண்மனை
பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் 2014 -ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து மீண்டும் புதிய கூட்டணியில் அரண்மனை இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமாமே வந்தது. இருப்பினும் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றிபெற்றது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இதற்கு கிடைத்த வரவேற்பால் சுந்தர் சி ஆர்யாவை வைத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை உருவாக்கினார். இப்படத்திற்கும் கலவையான விமர்சனம் தான் வந்தது.

நான்காம் பாகம்
இந்நிலையில் சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தை இயக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுக்கிறது.

விக்ரம் 2 வில் இணைகிறாரா முக்கிய பிரபலம்? மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்