வசூல் சாதனை படைத்த மகாராஜா.. சீனா பாக்ஸ் ஆபிஸ் விவரம்
மகாராஜா
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2024ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. இப்படத்தின் திரைக்கதை என்றும் நின்று பேசும்.
அடுத்தென்ன அடுத்தென்ன என்று நம்மை தொடர்ந்து யோசிக்க வைத்து, இறுதியில் ட்விஸ்ட் வைத்து ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமான சாச்சனா, பிக் பாஸ் 8-லும் போட்டியாளராக பங்கேற்றார்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
வசூல் சாதனை
கடந்த ஜூன் மாதம் வெளிவந்த சமயத்தில் இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. பின் கடந்த சில வாரங்களுக்கு முன் மகாராஜா படத்தை சீனாவில் வெளியிட்டனர்.
இந்த நிலையில், சீனாவில் வெளிவந்த மகாராஜா படம் இதுவரை ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு மகாராஜா திரைப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
