சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மகாராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் விடுதலை 2 திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்கிடையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
2024ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மகாராஜா. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சாச்சனா, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வசூல் வேட்டை
மக்கள் மத்தியில் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்தது. மேலும் சமீபத்தில் இப்படம் சீனாவில் வெளியிட்டனர்.
இந்த நிலையில், இதுவரை சீனாவில் மட்டுமே ரூ. 76 கோடி வசூல் செய்துள்ளது மகாராஜா படம். ரூ. 110 கோடியுடன் ரூ. 76 சேர்த்தால், இதுவரை ரூ. 186 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.