பல வருடங்களுக்கு பின் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல திரைப்படங்களில் உருவாகி வருகிறது. அதில் மூன்று ஹிந்தி திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜய் சேதுபதியை திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி.

இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்து உருவான திரைப்படம் இடம் பொருள் ஏவல்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். சில பிரச்சனைகள் காரணமாக இப்படம் பல வருடங்களாக வெளிவராமல் இருந்தது.
மீண்டும் வெளியாகும் இடம் பொருள் ஏவல்
இந்நிலையில், இப்படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவு வந்துள்ளது என்றும், விரைவில் இடம் பொருள் ஏவல் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
On board...?
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) October 16, 2022
'இடம் பொருள் ஏவல்'@ThirrupathiBros@dirlingusamy@VijaySethuOffl @TheVishnuVishal @aishu_dil @Nanditasweta @thisisysr @Vairamuthu @mukasivishwa #Raguldharman @VijayThenn @anbariv @onlynikil @CtcMediaboy pic.twitter.com/1XOCxOebpp