விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கப்போவது இவரா.. வெறித்தனமான காம்போ
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்தது.
நடிப்பை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக கலக்கி வந்தார் விஜய் சேதுபதி. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து, தெலுங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் தற்போது கூட்டணி சேர்ந்துள்ளார். பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.
சூப்பர் காம்போ
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகர் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் 'புஷ்பா', 'மாமன்னன்' போன்ற படங்களில் வில்லனாக கலக்கிய பகத்பாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu
