பல நாளாக வெளிவராமல் இருக்கும் விஜய் சேதுபதி திரைப்படம்.. ரிலீஸ் செய்ய முயற்சி எடுக்கும் முன்னணி நிறுவனம்
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் தான்.
அதன்பின் மீண்டும் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான தர்மதுரை படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து மாமனிதன் படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் கைகோர்த்தது. ஆனால், மாமனிதன் திரைப்படம் சில வருடங்கள் கிடப்பில் கிடைத்தபின் தான் திரைக்கு வந்தது.
இதே போல் பல வருடங்களாக திரைக்கு வரமுடியாமல் இருக்கும் திரைப்படம் தான் இடம் பொருள் ஏவல். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இரண்டாவது திரைப்படமாகும் இது.
முயற்சி எடுக்கும் முன்னணி நிறுவனம்
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் சில காரணங்களால் தற்போது வரை வெளிவராமல் இருக்கிறது.

இந்நிலையில், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்களாம். இதனால், விரைவில் இடம் பொருள் ஏவல் திரைப்படம் திரைக்கு வர அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகிறதா என்று.