முதன்முறையாக பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கும் கிருத்திகா உதயநிதி.. அட இவரா
கிருத்திகா உதயநிதி
வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தை இயக்கினார்.
அதன் பின், சிறிது காலம் சினிமா பக்கம் வராமல் இருந்த கிருத்திகா பேப்பர் ராக்கட் என்ற வெப் தொடர் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் "காதலிக்க நேரமில்லை" என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில், ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அட இவரா
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கிருத்திகா உதயநிதியின் அடுத்த பட ஹீரோ குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கிருத்திகாவின் அடுத்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
கிருத்திகா சொன்ன கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்க விஜய் சேதுபதி ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.