வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை.. அட, இவரா
தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம் என மூன்று திரைப்படங்களும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை.
இந்நிலையில் கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் தயாராகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறாராம்.
இந்த வெப் சீரிஸை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர்.
இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ரெஜினா கசன்ட்ராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டும் உறுதியானால், நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவாகும்.