மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மகாராஜா படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் கிராமத்து பின்னணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
ஓடிடி உரிமை
இந்த நிலையில், இப்படத்திற்கு ஆகாச வீரன் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி கூடுதலாக படத்தின் ஓடிடி உரிமை எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தை ரூ. 22 கோடிக்கு அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரூ. 17 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதை விட ரூ. 5 கோடி அதிகமாக இப்படம் விற்பனை ஆகியுள்ளது.
இது தயாரிப்பு நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மே அல்லது ஜூன் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.