முக்கிய படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி? காரணம் என்ன
அரண்மனை 4
சுந்தர் சி இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் அரண்மனை. அதன் அடுத்தடுத்த பாகங்கள் சுமாரான வரவேற்ப்பை தான் பெற்றன. ஹாரர் படங்களுக்கு என ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் அவர்களுக்காக சுந்தர் சி தொடர்ந்து அரண்மனை அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார்.
தற்போது அரண்மனை 4 படத்தை சுந்தர் சி எடுத்து வருகிறார். அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் நடிக்கிறார்கள் என செய்தி வெளியானது.
விலகிய விஜய் சேதுபதி?
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் அதற்கு தேதி ஒதுக்க முடியாததால் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது விஜய் சேதுபதி ஹிந்தியில் ஜவான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுறா படத்தில் நடித்தது ஏன்? விஜய்யே சொன்ன காரணம்