பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்
Vijay Sethupathi salary for Bigg Boss 10: பிக் பாஸ் சீசன் 10 கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 2016-ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பமானது. 7 சீசன்களாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதன்பின், 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார். தன்னுடைய பாணியில் போட்டியாளர்களை கையாண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

பிக் பாஸ் 10
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் 10, கடந்த சீசன்களை விட மிகவும் குறைவான வரவேற்பையே ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. ஆனால், இது வெறும் ஆரம்பம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சேதுபதி பேசிய சில விஷயங்கள் இணையத்தில் சர்ச்சைக்குள்ளான நிலையில், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது கவனம் திரும்பியது. நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை, இது நிகழ்ச்சிக்குள் உள்ள கருத்து மட்டுமே என்றும் விஜய் டிவி தரப்பிலிருந்தும், விஜய் சேதுபதியும் தெரிவித்தனர். சம்பளம் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து மூன்று சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சம்பளம்
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 10-ஐ தொகுத்து வழங்குவதற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 70 - 80 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.

சல்மான் கானுக்கு பிறகு இந்தியாவிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக சம்பளம் வாங்குவது நடிகர் விஜய் சேதுபதிதான் என்கின்றனர். நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ. 150 கோடி சம்பளம் வாங்குகிறார் என தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan