உடல் எடை குறைக்க இதுதான் முக்கியம்.. விஜய் சேதுபதி கொடுத்த ட்விஸ்ட்
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.
அடுத்ததாக இவரது நடிப்பில் வரும் 23ம் தேதி அதாவது நாளை வெளிவர உள்ள திரைப்படம் Ace. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருகின்றனர்.
இதுதான் முக்கியம்
இந்நிலையில், விஜய் சேதுபதி அவர் உடல் எடை குறைத்தது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதே முக்கியம். நான் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால் அதுவே என் உடல் எடை குறைப்பதற்கு போதுமான ஒன்று.
நான் எடை பார்க்கும் மெஷனை பயன்படுத்துவதே இல்லை. அதில் காட்டும் எண்கள் என்னை சோர்வடைய செய்யும், உடல் எடையை விட மனம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம்" என தெரிவித்துள்ளார். தற்போது இவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
