அஸ்வின் போல் கதை கேட்கும் பொழுது தூங்கிய விஜய் சேதுபதி.. ஆனால், அந்த படம் சூப்பர்ஹிட்
சர்ச்சை பேச்சு
நான் 40 பேரிடம் 40 கதைகளை கேட்கும் பொழுது தூங்கிவிட்டேன் என்று சில மாதங்களுக்கு முன் மேடையில் இளம் நடிகர் அஸ்வின் பேசியது பெரிதும் சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில், தற்போது அதே போல் நடிகர் விஜய் சேதுபதியும் கதை கேட்கும் பொழுது தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூங்கிய விஜய் சேதுபதி
அதன்படி, நானும் ரவுடி தான் படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியிடம் முதல் முறையாக கூறும் பொழுது அவர் தூங்கிவிட்டாராம்.
கதையில் சுவாரஸ்யம் இல்லை, கதையை மாற்றி அமைத்து கொண்டு வாருங்கள் என்று விக்னேஷ் சிவனிடம் கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி.
இதன்பின், நானும் ரவுடி தான் படத்தின் கதையை மாற்றியமைத்து கொண்டு வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம் இருந்து க்ரீன் சிக்னல் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
