விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் பட ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
சூர்யா
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக தற்போது அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே, சூர்யா தன் அப்பாவுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் முதலில் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியானதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஜூலை மாதம் 4ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.