தினமும் வெறும் 500 ரூ. மட்டும் தராரு.. அதனால் நடிக்க வந்தேன்: விஜய் சேதுபதி மகன் அப்படி சொன்னாரா?
விஜய் சேதுபதி கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நெகடிவ் ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது பிக் பாஸ் ஷோ மூலமாக சின்னத்திரையில் கூட தடம்பதித்து விட்டார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தற்போது ஃபீனிக்ஸ் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அது வரும் நவம்பர் 14 ரிலீஸ் ஆகிறது.
ட்ரோல்கள்
சூர்யா சேதுபதி பேசும் விஷயங்கள் இணையத்தில் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வருகின்றன. "நான் வேற, அப்பா வேற" என கூறி, அவர் மூலமாக தான் சினிமாவுக்கு வரவில்லை என்பது போல பேசியதால் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் தனக்கு அப்பா தினமும் வெறும் 500 ருபாய் தான் கொடுக்கிறார், அதனால் தான் நடிக்க வந்தேன் என சூர்யா சேதுபதி கூறியதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதை குறிப்பிட்டு நெட்டிசன்களும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆனால் விசாரித்ததில் அவர் அப்படி எங்கும் பேசவில்லை என அவரது தரப்பு கூறுகிறதாம்.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
