என் மனைவியிடம் அதை நான் செய்திருக்கவே கூடாது.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு மகாராஜா எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இவர், இந்த ஆண்டு தலைவன் தலைவி படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார். இவர்கள் இருவருடைய ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் விஜய், சேதுபதி, நித்யா மேனன் மற்றும் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் மூவரும் கலந்துகொண்டனர்.
ஓபன் டாக்
இதில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது தனது சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்டார்.
இதில் விஜய் சேதுபதி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயத்தையும் அங்கு பகிர்ந்துகொண்டார். இதில் "இதை நான் பொது மேடையில் சொல்லலாமா என்று தெரியல. ஒருமுறை என் மனைவியின் கழுத்தை பிடித்து செவுத்துல அப்படியே வச்சுட்டேன். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என்னதான் இருந்தாலும் நான் கை வைத்திருக்கக் கூடாது. அப்புறம் ஒரு 5 நிமிஷம் தான் இருக்கும். சரி, தப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் மேல கை வைக்கிறது ரொம்ப தப்பு என்று சொல்லி அப்போதே மன்னிப்பு கேட்டுட்டேன். அதற்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணேன்" என கூறியுள்ளார்.