முன்னணி நடிகருக்கு வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி.. வெளியான மாஸ் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஏற்கனவே பல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.
ஆம், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
அந்த வரிசையில் தற்போது விக்ரம் படத்தில் உலகநாயகன் கமலுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிக்க சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan