விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி..? இயக்குனர் விக்னேஷ் சிவனின் அதிரடி பதில்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
AK 62
இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து AK 62 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித்துக்கு ரூ. 105 கோடி சம்பளம் கொடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வில்லன் விஜய் சேதுபதி
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக, விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
இந்த கேள்வியை விஜய் சேதுபதியும், இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டாராம். அதற்கு ' என் ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன் ' என்று விக்னேஷ் சிவன் கூறிவிட்டதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இதன்முலம் AK 62 படத்தில் அஜித்துக்கு வில்லன் விஜய் சேதுபதி இல்லை என்று தெரியவந்துள்ளது.