விஜய் சேதுபதிபதிக்கு ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை.. இயக்குனர் யார் தெரியுமா! இதோ
விஜய் சேதுபதி
மகாராஜா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் குறித்து சமீபத்தில் தகவல் வெளிவந்தது.
அதன்படி, அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
[T8UXGZ ]

திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ
பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அதன்பின் தற்போது விஜய் சேதுபதியுடன் கைகோர்த்துள்ளார். பாண்டிராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி இணைவது இதுவே முதல் முறையாகும்.
கதாநாயகி
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக சென்சேஷனல் நடிகை நித்யா மேனன் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நாயகிகளில் ஒருவர் நித்தியா மேனன்.
நித்யா மேனன் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
