சீயான் விக்ரமின் அடுத்த படத்தில் இணையும் நடிகர் விஜய்..? அதுவும் யாருடைய கதையில் தெரியுமா
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம்.
இயக்குனர் பாலாவின் சேது படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.
இவரும், குறுகிய காலக்கட்டத்தில் தன் தனித்துவமான நடிப்பால் உச்ச நடிகர்களுள் ஒருவராக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதியும் புதிய படத்தில் இணையப்போவதாக ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் கமல் ஹாசனின் ஸ்க்ரிப்ட்டில் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள இந்த படத்தில் இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
தற்போது நடிகர் விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்திலும் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகின்றனர்.