மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96 படம்- பிரபலமே போட்ட பதிவு
96 திரைப்படம்
பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான அழகிய காதல் திரைப்படம் 96.
விஜய் சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி, கௌரி, ஜனகராஜ் என பலர் நடிக்க வெளியான இப்படம் அழகிய காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி காலத்தில் வந்த கை கூடாத காதலை இப்படம் அழகாக காட்டியுள்ளது.
கோவிந்த் வசந்த் இசையமைக்க வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
புதிய அப்டேட்
கடந்த சில வருடங்களாக பழைய ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகிவரும் நிலையில் தற்போது இன்னொரு படம் குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது அனைவரின் பேவரெட் படமாக அமைந்துள்ள 96 திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி ரி ரிலீஸ் ஆக இருக்கிறதாம். இந்த தகவலை விஜய் சேதுபதியே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.