அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி!
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு பேசாமல் இருந்தார்.
இந்நிலையில் அவர் எலிமினேட் ஆகி வெளியில் வந்து விஜய் சேதுபதி உடன் பேசும்போது மோசமான ஒரு விஷயத்தை செய்தார்.
எச்சரித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் மேடையில் நின்று வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசும்போது அவர் ஆண்களை மோசமாக பேசினார்.
'டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே டீம் சேர்ந்து என்னை ஒதுக்கிடீங்க' என அவர் பேச, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.
'இது அநாகரீக பேச்சு. உங்க வன்மத்தை கக்காதீங்க. இப்படி எல்லாம் பேச கூடாது' என சொல்லி விஜய் சேதுபதி அவரை எச்சரித்தார்.
"உங்க எலிமினேஷனுக்கு ஆண்கள் டீம் காரணம் இல்லை. உங்களை நாமினேட் செய்தது பெண்கள் டீம். ஓட்டு போட்டது வெளியில் இருக்கும் மக்கள். அதனால் நீங்கள் வெளியில் வர ஆண்கள் டீம் எந்த விதத்திலும் காரணம் இல்லை" என சொல்லி விஜய் சேதுபதி அவருக்கு விளக்கம் கொடுத்தார்.